ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆளும் கட்சி 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த வரலாற்றை மாற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதனை போல குஜராத் சட்டசபையின் பதவி காலம் 2023 பிப்ரவரி 18ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து இரண்டு மாநில தேர்தல் தேதிகளுக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட து.
ஆனால் ஹிமாச்சலபிரதேச தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. குஜராத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் கூறியது, ஹிமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும். மொத்தம் 68 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஓட்டு பதிவு செய்யப்படும். அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். ஹிமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பில் விதிமுறைகள் மீறப்படவில்லை. வழக்கமான நடைமுறை பின்பற்றியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் டிசம்பர் மாதத்தில் பணி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காகவே அங்கு தேர்தல் விரைவாக நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து வருவது தேர்தல் கமிஷனை கவலையடைய செய்துள்ளது. மேலும் நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.