வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே தோல்வியை தழுவியது.
வங்கதேசம் – ஜிம்பாவே அணிகளுக்கான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலின் அதிரடியாக ஆடி 158 ரன் குவித்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வைத்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று வங்களாதேஷ் பந்துவீச்சளர்கள் பந்தை நொறுக்கியது. அந்த அணியின் திரிபானோவின் புயல் வேக ஆட்டத்தால் ஜிம்பாவே வெற்றி பெற்று விடுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
கடைசி 4 பந்தில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது 3ஆவது , 4ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார் திரிபானோ. இதனால் 2 பந்தில் 4 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை வந்த போது 5ஆவது பந்தில் ரன் எடுக்காத திரிபானோ கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தார்.
இதனால் நூலிழையில் ஜிம்பாப்வே அணியின் வெற்றி பறிபோனது. 4 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிபானோ 28 பந்தில்2 பவுண்டரி 5 சிக்சருடன் 55 குவித்து அசத்தினார்.