Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Image result for Iran released 54,000 prisoners to prevent corona virus from spreading

இதையடுத்து நீதித் துறை செய்தி தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் கூறுகையில்,, கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்படுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும்  5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image result for Iran released 54,000 prisoners to prevent corona virus from spreading

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 92 பேர் பலியானதோடு, 2, 992 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், 435 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Categories

Tech |