மைக் செட் ஸ்ரீராம் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது.
மைக் செட் ஸ்ரீராம் யூடியூப் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சினிமாவில் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தை என்என் பிக்சர் சார்பாக வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோர் முதல் முதலாக தயாரிக்க இயக்குனர் விவேக் படத்தை இயக்குகின்றார்.
இந்தப் படம் ரொமான்ஸ் காமெடிபாணியில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்தப் படம் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகின்றது. இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை மானசா மற்றும் ரிமி உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இந்த படத்தின் தயாரிப்புக்கு முன்பாக நடைபெறும் பணிகள் நடந்து வருகின்றது.