பிரபல நாட்டில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிங்கப்பூரில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய வளர்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக்குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் ஆசிய நவீனமயமாக்குதலில் உள்ள சவால்கள், உலகளாவில் பொருளாதார மீட்பு, ஆசியாவில் பிராந்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது. இதுகுறித்து உலக ஆய்வு கழக தலைவர் யுவான் சான் கூறியதாவது. இந்த ஆசிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் வெளிப்படுத்தும் வகையில் இந்த மன்றம் தொடங்கப்பட்டது. அதனால் தான் இதற்கு ஆசிய சிந்தனை மன்றம் என்று பெயரிடப்பட்டது என அவர் கூறியுள்ளார்.