Categories
சினிமா தமிழ் சினிமா

“32,000 சிறுமிகள் மதமாற்றம்”….. கேரளாவை தவறான முறையில் சித்தரித்த “தி கேரளா ஸ்டோரி”…. போலீஸ் அதிரடி…..!!!!!

தமிழ் சினிமாவில் சிம்பு ‌ நடித்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர் பிரபல பாலிவுட் நடிகை அதா சர்மா. இவர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை ஒரு ஐஎஸ் பயங்கரவாதியாக மாற்றிவிட்டதாக ஹீரோயின் கூறுகிறார்.

அதன் பிறகு தன்னைப் போன்று 32,000 சிறுமிகளையும் மத மாற்றம் செய்து பயங்கரவாத அமைப்புடன் சேர்த்து தீவிரவாதிகளாக மாற்றிவிட்டதாக கூறுகிறார். அதோடு கேரள மாநிலத்தில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் பயங்கரவாதிகளாக மாறும் அபாயம் நிலவிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இந்த படத்தைப் பார்த்த தணிக்கை குழு அமைப்பு படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது டீசர் வெளியான நிலையில் கேரள மாநிலத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து படம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஒரு சாரார் மதத்தினை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக படம் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கேரள டிஜிபி அனில் காந்த் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு படத்தின் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |