Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

152/0 vs 170/0….. அன்றும்…. இன்றும்….. “இந்தியா படுதோல்வி”…. மறைமுகமாக ட்விட் போட்டு கிண்டல் செய்த பாக் பிரதமர்..!!

இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியால் விக்கெட் இழப்பின்றி 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வரும் 13ஆம் தேதி எதிர்கொள்கிறது.

 

உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி தற்போது அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்திலும், அதிர்ச்சிலும் ஆழ்த்தியுள்ளது. லீக் சுற்று போட்டியில் 4 வெற்றிகளை பெற்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரையிறுதிக்கு வந்துள்ள இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை, இது: 152/0 vs 170/0 என பதிவிட்டுள்ளார்.

ஏனென்றால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட பறிகொடுக்காமல் 170 ரன்கள் குவித்து இந்திய அணியை வென்றது. அதே போல கடந்த 2021ஆம் ஆண்டு லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தானும் இதேபோல சேசிங் செய்யும் போது விக்கெட்டை இழக்காமல் 152 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. எனவே இந்த 2 போட்டியை குறிப்பிடும் விதமாகவே இப்படி பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.

அத்துடன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய 2 அணிகளில் ஒன்று பாகிஸ்தான் மற்றொன்று இங்கிலாந்து.. அதே சமயத்தில் டி20 உலக கோப்பையில் 2 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்ட ஒரே அணியும் இந்திய அணி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |