Categories
தேசிய செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. சிறுமியின் வயிற்றில் இருந்த முடி…. அரிய நோயே இதற்கு காரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

சிறுமி ஒருவர் கடுமையான வயிறு வலி மற்றும் செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாப்பிடுவதெல்லாம் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்துள்ளது. எனவே சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்றில் முடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிக்கு முடி உண்ணும் நோய் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மற்ற உணவுகளை போல வயிற்றில் முடி செரிக்கப்படாமல் இருப்பதே பிரச்சனையை அதிகரித்துள்ளது. குடலில் முடிகள் அடைக்கப்படுவதால் எந்த உணவும் வயிற்றை அடையாது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமியின் வயிற்றிலிருந்து 1.2 கிலோ எடையுள்ள முடியை அகற்றினர். மேலும் சிறுமிக்கு தலைமுடி உண்ணும் அரிய நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |