கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அளிப்பதற்காக மருந்துகளை தெளித்தார்கள்.
மேலும் தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. ஆழ்வார் திருநகரிலிருந்து நடமாடும் மருத்துவ குழுவினர் வந்து மக்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ் மகேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றார்கள்.