ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது அடுத்த திரைப்படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து அடுத்த படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் நம்பப்படுகிறது.