அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.
இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இப்படத்தின் வசூலை பொருத்த தான் அடுத்த பாகத்தை தயாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.