Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு நவம்பர் 13-ல் நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் உள்ள 17 மையங்களில் வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தொலைவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு கூட நுழைவுச்சீட்டை www.civilservicecoaching.comஎன்ற இணையதள மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |