Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நவம்பர் 17 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதில் முதல் கட்டமாக சென்னை மற்றும் மதுரையிலிருந்து தலா இரண்டு பேருந்துகள் குமுளி மற்றும் பம்பாவுக்கு இயக்கப்படும். அவரைத் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 50 சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபராக செல்வோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் குழுவாக செல்வோருக்கும் சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.

Categories

Tech |