வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் 044-25619206, 07, 08 என்ற எண்களில் அல்லது 9445477205என்ற whatsapp எண்ணில் அல்லது சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ டிப்பர் பக்கத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோட்டார் பம்புகள் வாயிலாக 114 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.