தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலை தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மிஸ்கின், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேச வரும்போது ஹீரோகளுக்கு கிடைக்கும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் பதறிப்போன பிரதீப் ரங்கநாதன், போதும் மாட்டி விட்ராதீங்க. இப்போதுதான் ஆரம்பிச்சிருக்கேன் என்று தனது பாணியில் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் சாருக்கு முதல்ல நன்றி. லவ் டுடே படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைச்சதுக்கு நீங்களும் ஒரு காரணம். படத்தை பார்த்துட்டு சார் எனக்கு கால் பண்ணி நல்லா வந்திருக்கிறது என்று பாராட்டினார். இதனை என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டேன். ‘கழக தலைவன்’ டிரெய்லர் சூப்பரா இருக்குது. மகிழ் சாருக்கு நான் பெரிய ஃபேன் என தெரிவித்துள்ளார்.