Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு முதலமைச்சர் பதவியை கூவத்தூரில்  உட்கார்ந்து கொண்டு,  யார் பண்ணது ? சின்னம்மா தட்டிக் கொடுத்து,  இவர் தவழ்ந்து வந்து, இவரை எழுப்பி நிப்பாட்டி, இழுத்து, தட்டிக்கொடுத்து

அவருக்கு முதலமைச்சர் என்ற பதவியை தந்தது யார் ? சின்னம்மா.  அந்த சின்னம்மாவை இவர் எந்த அளவிற்கு விமர்சனம் செய்தார். ஆக நம்பிக்கை துரோகி யார் ? என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. நான் திமுகவுடன் சேர்ந்து கொண்டு அரசியல் பண்ண தேவையில்லை. நான் சுத்தமானவனாக இருந்த காரணத்தினால். இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் 2001-இல் முதலமைச்சர் என்ற பதவியை தந்தார்கள். 13 ஆண்டு காலம் அம்மாவுடன் பயணித்திருக்கிறேன்.

ஆளும் கட்சியிலும் பயணித்திருக்கிறேன்,  எதிர்க்கட்சியிலும் பயணித்திருக்கிறேன். 13 ஆண்டுகளுக்கு பின்னால் பெங்களூரில் உயர்நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பு வருகின்ற பொழுது மீண்டும் மாண்புமிகு அம்மா அவர்கள் தான் எனக்கு முதலமைச்சர் பதவியை தந்தார்கள். முதலமைச்சர் பதவி பெரிதா ? துணை முதலமைச்சர் பதவி பெரிதா ? துணை முதலமைச்சர் பதவி எனக்கு சொன்ன போது,  வேண்டாம் என்று சொன்னேன் நான் என தெரிவித்தார்.

Categories

Tech |