இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. மேலும் ஸ்காட்லாந்தில் 3 பேருக்கும் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருவருக்கும் வைரஸ் தொற்று இருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் ஐந்தில் ஒரு பகுதியினர் பாதிக்கப்படலாம் என்று சுகாதார துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.