Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பொங்கல் சிறப்பு தொகுப்பு…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.

அதில் மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்க பணமாக வழங்கலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக உங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ரொக்க பரிசு தொகையுடன் தற்போது ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் 100ml அல்லது 500ml ஆவின் நெய் வழங்கப்பட முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |