தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 15ம் தேதி வரை இந்த வானிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.