Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கொண்டு வர ஏன் இவ்ளோ late…? உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி ஊழியர் புகார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |