Categories
மாநில செய்திகள்

கனமழை!…. “கடைசி 2 அடி ரொம்ப முக்கியம்”….. நீர்நிலை கண்காணிப்பில் சென்னைக்கு பறந்த அதிரடி உத்தரவு‌‌….!!!!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள நீர்நிலைகளில் 2 முதல் 3 அடி வரை தண்ணீரின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் கூட நீர்நிலைகள் தொடர்ந்து சுத்தப்படுத்தப்படுவதோடு கழிவுகள் கடலில் கலக்காதவாறு நீர்நிலைகளில் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சில சமயங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கி விடுகிறது. அதன் பிறகு நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் மழைநீர் வடிகால்களில் இருந்து வரும் தண்ணீரை கடல் உள் வாங்குவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

இதனையடுத்து சென்னையில் உள்ள பல்வேறு பல இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதேபோன்று அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால அவசர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு புழல் ஏரியில் 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளால் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்வதோடு தேவைப்படும் பகுதிகளுக்கு மோட்டார்களும் அனுப்பப்படுகிறது.

Categories

Tech |