ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது எனவும் அதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயங்களுடன் இருப்பவர்கள் உக்ரைன் நாட்டின் கிராஸ்னோரிசென்ஸ்கேவ் நகரத்தில் கைவிடப்பட்டிருக்கிறார்கள் என்றும் ரஷ்ய வீரர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் தங்கள் கணவர்களின் குழுவை உக்ரைன் படையினர் அழித்ததை தெரிந்து கொண்ட அவர்களின் மனைவிகள் ரஷ்யாவின் எல்லை நகரத்திற்கு விரைந்தார்கள்.
தங்கள் கணவர்களை மீட்டுத் தருமாறு கூறிய அவர்கள், ரஷ்ய தளபதிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் அவர்களை மீட்பதற்காக நாங்களே போர் நடக்கும் உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் தெரிவித்ததாவது, தளபதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அங்கு பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களை அழைத்து வர வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.