Categories
தேசிய செய்திகள்

எரிந்து கிடந்த கால்…. தந்தையுடையதா ? பார்வையற்ற கணவருடன் தவிக்கும் பெண் …!!!!

டெல்லி வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அகன்றது. பலர் உறவினர்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கலவரம் முடிந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் ஆகக் கூடிய நிலையிலும் அங்கு நடந்த நிகழ்வுகள் நம் கவனத்தை பெற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வட கிழக்கு டெல்லியில் வசித்து வரும் இளம்பெண் குல்ஷன் , கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவர் முகமது நஸ்ருதீன்னுடன் வசித்து வருகின்றார்.

குல்ஷன்னின் தந்தை 61 வயதான அன்வர் , ஆடு விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் டெல்லி வன்முறை நிகழ்ந்த பிறகு தனது தந்தையை காணவில்லை என குல்ஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவலர்கள் மருத்துவமனை சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு குல்ஷனை அறிவுறுத்தினர்.

சவக்கிடங்கில் பார்த்த குல்ஷனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் அங்கு கிடந்த ஒரு காலை மட்டும் எடுத்த குல்ஷன் இது தன் தந்தையுடைய கால் தானா என்று ஏங்க ஆரம்பித்தார்.

இதையடுத்து டிஎன் டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் குல்ஷன் கடந்த 29ஆம் தேதி முதல் பார்வையற்ற தனது கணவருடன் டிஎன்ஏ பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்துக் கிடக்கிறார். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |