எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது.
அதிகளவு தரம் கொண்டிருப்பதால், வணிகமுறைக்கு ஏற்ப பல்வேறு விதங்களில் பயன்படுத்த இயலும். காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் மிகவும் விசேஷமான சிலிகானின் மூலப்பொருளில் இருந்து இந்த Stretchable டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக Stretchable டிஸ்ப்ளேவை 12 இன்ச்-ல் இருந்து 14 இன்ச் வரையிலும் நீட்டிக்க முடியும். இந்த டிஸ்ப்ளே மைக்ரோ எல்.இ.டி பயன்படுத்துகிறது. வழக்கமான லீனியர் வயர்டுசிஸ்டம் போல் இன்றி, இதிலுள்ள வளையும் தன்மை உடைய S-ஃபார்ம் ஸ்ப்ரிங் போன்ற வயர்டு சிஸ்டத்தை உருவாக்குகிறது.
இது அதனுடைய அசல் வடிவத்திலிருந்து 10 ஆயிரம் முறை மாற்றக்கூடிய அளவிற்கு உறுதியாகவும், திடமாகவும் இருக்கும். இந்த டிஸ்ப்ளேவை சருமம், ஆடை, ஆட்டோ மொபைல், விமானத்துறை என பெரும்பாலான துறைகளில் பல பயன்பாட்டிற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். வர்த்தக சாதனங்களில் இந்த டிஸ்ப்ளே எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து எல்ஜி டிஸ்ப்ளே இதுவரையிலும் எந்த தகவலையும் வழங்கவில்லை.