Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாணவர்களிடம் நூதன மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவி தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் தனியாக வங்கி கணக்கு உருவாக்கப்படுவது. அந்த கணக்கு பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசுபவர் குழந்தையின் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து பேசுவதாக கூறி கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு எண் மற்றும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட பல விபரங்களை திரட்டி ஸ்கேன் செய்து அனுப்ப சொல்கிறார்கள்.

அதனை பள்ளியில் இருந்து கேட்பதாக நினைத்து பெற்றோர்களும் ஏமாந்து விடுகின்றனர். இதை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. எனவே மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் விபரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகார்களை 1930 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என சைபர் கிரைம் அறிவித்துள்ளது.

Categories

Tech |