Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று பஞ்சாப் தலைமை செயலாளர் விஜயகுமார் ஜான் ஜூவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டுள்ளது. வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் வேளாண் கழிவுகளை எரிக்கும் காரணங்களால் ஏற்படும் பின் விளைவுகளால்  பல நகரங்களில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதித்து வருகிறது என ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தப்படவில்லையென்றால் வேண்டும் இல்லையென்றால் பஞ்சாப் அரசு மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |