Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. சசிகலாவின் அண்ணன் மகள் திடீர் தற்கொலை முயற்சி….. குடும்பத் தகராறு காரணமா…..? வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் விவேக் அடிக்கடி வீட்டிற்கு காலதாமதமாக வருவதால் அவருடைய மனைவி கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் விவேக் வீட்டிற்கு காலதாமதமாக வரவே கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா வீட்டில் இருந்து தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூக்க மாத்திரை அதிக அளவில் சாப்பிட்டதால் கீர்த்தனா மயக்கம் அடையவே அதிர்ச்சி அடைந்த விவேக் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கொடுத்துள்ளார்.

அதன்பின் மேல் சிகிச்சைக்காக அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெயராமன் மற்றும் இளவரசியின் மருமகள் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்ட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌

Categories

Tech |