கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இந்த வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த மாகாணத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று கொரோனாவால் 38 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2, 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனா முதலில் பரவத்தொடங்கிய ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது