தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷிடம், அவரின் அண்ணன் மணியை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், உண்மையில் புஜ்ஜி ஒரு பன்னான பர்சன். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் மிகவும் சீரியஸாவே இருக்கான்.
அது ஏன் என்று தெரியவில்லை. இரண்டு நாளைக்கு முன்னாடி சண்டை கூட போட்டு இருந்தான். ஆனால், அது புஜ்ஜியோட உண்மையான கேரக்டரே இல்ல. ஒருவேளை பிக்பாஸ் போனா அப்படி மாறிடுவாங்களா இல்ல வேணும்னே பண்றானான்னு டவுட்டா இருக்கு என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.