Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….. 1,00,000 மாஸ்க் கடத்தல்…. பிரிட்டனில் வினோதம் …!!

பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்க் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் பல இடங்களில் மாஸ்குகள் திருடு போகின்றது.

அந்த வகையில் தற்போது பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்குகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மெராக்கோவின்  TANGER MED துறைமுகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே Costa del solயில் உள்ள மருத்துவமணையில் இருந்து 300 மாஸ்க் திருடு போன சம்பவனத்தை தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

இவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அவரின் கிராமத்திற்கு கடத்த முயன்றதாகவும் , அங்குள்ள நண்பர்கள் , உறவினர்களுக்கு மாஸ்க் வழங்க இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட மஸ்குகளின் விலை 2.6 மில்லியன் பவுண்ட் ஆகும்.

Categories

Tech |