Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு சாலைகளின் நிலைமை, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், எந்திரத்தில் கோளாறு, போக்குவரத்து நெரிசல் போன்றவைகள் தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் இருக்கும்போது போக்குவரத்து விதிமீறல் களுக்கான அபராத கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சாதாரண மக்களை காவல்துறையினர் துன்புறுத்துவர்‌.

அரசாங்கம் அபராத தொகையை உயர்த்துவதற்கு முன்பாக மக்களுக்கு நல்ல சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக தமிழக அரசும், போக்குவரத்து துறை ஆணையரும் 3 வர காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 3 வார காலத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |