விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் அசீம், விக்ரம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே ஆகியோர்கள் உள்ளனர். இவர்களில் யார் வெளியேற போகிறார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களில் விக்ரம், அசீம் அதிக வாக்குகள் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஏடிகே, தனலட்சுமி ஆகியோர் உள்ளனர். கடைசியாக இரண்டு இடங்களை பிடித்து மகேஸ்வரி, ராம் இருவரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி ஆக்டிவாக இருந்த அளவிற்கு ராம் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ராம் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.