தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலை தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மிஸ்கின், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, இந்த படத்தை தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி வருகிறது. ஆனால் படம் சூட்டிங் 70 நாள் மட்டுமே நடித்துள்ளேன். அதிக நாட்கள் ஆனதால் இந்த படம் நடித்ததே மறந்து விட்டேன். மகிழ் திருமேனி படங்களில் எப்போதும் பரபரப்பு இருக்கும். இந்த படமும் அப்படி இருக்கும். தமிழ் சினிமாவை நான் நான் தூக்கி பிடித்த மாதிரி நடிக்கிறதை விட்டு விடாதீங்கனு பலரும் பேசுறாங்க. ஆனால் நான் நடிப்பதே இல்லை. இன்னும் நடிக்க தொடங்கவே இல்லை. என்னோட நடிப்பை பத்தி மாரி செல்வராஜ் சார் கிட்ட கேட்டா தெரியும். மாமன்னன் படப்பிடிப்பு தொடங்கி கொஞ்ச நாளைக்கு பிறகு நானே அவர்கிட்ட போய் என் நடிப்பு பற்றி கேட்டேன். அதற்கு அவர் ஒரே வரியில் இருங்க சார் இன்னும் 10 நாள் போகட்டும் பாத்துட்டு சொல்றேன் சொல்லிட்டாரா. அப்படித்தான் இருக்கும் என் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.