இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மிரள். இந்த படத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப பின்னணியில் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்-வாணி போஜன் இருவரும் மகனோடு வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் தன் கணவரையும் தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்லுவது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பரிகாரம் செய்ய பரத் குடும்பத்துடன் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊருக்கு செல்கின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கியுள்ளார்.
அதன் பிறகு குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவு செய்கிறார். குடும்பத்துடன் அந்த ஊரிலிருந்து புறப்பட்ட பிறகு ஒரு காட்டில் மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் மூவரை வாணி போஜன் கனவில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்கள்? என்பதை பிரள் படத்தின் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் அதற்கு வலு சேர்க்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கவில்லை. இந்த மாதிரியான தில்லர் படங்களுக்கு தேவையான திகில் சம்பவங்கள் இருள் காட்சிகள் படம் முழுக்க இல்லாமல் போனது படத்தின் பலவீனம். இன்றைய சமுதாயத்திற்கு தேவையான கதையை திகில் சம்பவங்களுடன் கலந்து ஒரு மெசேஜ் சொல்லி மிரள் படத்தை இயக்குனர் சக்திவேல் தந்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தின் க்ளைமக்ஸ் வரை படத்தின் சஸ்பென்ஸ் கொண்டு சென்று இருப்பதை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மொத்தத்தில் மிரள் திரைப்படம் மிரட்டி இருக்கிறது.