Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நடிகை…. பக்தி பாடல் பாடி அசத்தல்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மியாசாகி மசூமி. இவர் நடிகையாக இருந்து பணம், பெயர், புகழ் சம்பாதித்தும் மனநிம்மதி இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து மியாசாகி மசூமி ஜப்பானிலுள்ள ஹராமுரா எனும் தன் சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்தார். தமிழகத்தில் இருப்பது போன்று நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்த பயிருக்கு முருகா என பெயரிட்டும் அவர் அறுவடை செய்துள்ளார்.

அதன்பின் அறுவடை செய்த நெல்லை அரிசி ஆக்கி தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து பல ஆலயங்களுக்கும் அளித்து வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை வந்த ஜப்பான் நடிகை மற்றும் அவரது 5 பேர் கொண்ட குழுவினர் மாயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குமரக் கட்டளை சன்னதியில் ருத்ர யாகம் செய்து வழிபாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு நேரில் சென்று ஆதினகுரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்று தன் வயலில் விளைந்த முருகா நெல்லின் அரிசியை நடிகை காணிக்கையாக சமர்ப்பித்தார். முன்பாக ஜப்பான் நடிகை மயூரநாதர் ஆலயத்தில் முருகன் மற்றும் சிவன் பற்றி தமிழ் பக்தி பாடல்களை நெஞ்சுருக பாடி வழிபட்டது அனைவரையும் கவரந்தது. இதனிடையில் ஜப்பான் நடிகை பேசியதாவது “தமிழ்மொழி கலாச்சாரம் தன்னை கவர்ந்ததாகவும், இதுகுறித்து படிக்க ஆரம்பித்த பிறகே தனக்கு மனநிம்மதி கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Categories

Tech |