ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக ரத்த கொழுப்பு கொண்ட பிரச்சினைகள் குணப்படுத்தும் செயல் திறன் அந்த மருந்துகளுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கேரளத்தில் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபுவின் புகாரின்படி மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி சேவை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த புகாரில், குளுகோமா, கண்புரை மற்றும் பல கண் பிரச்சனைகளுக்கு பதஞ்சலி தயாரிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று விளம்பரம் செய்வதாகவும் இந்த சிக்கலுக்கு கண் தொட்டு மருந்து பயன் தராது. மாறாக சொட்டு மருந்து குருட்டு தன்மை ஏற்படும். அதனைத் தொடர்ந்து இது போன்ற இதர மருந்துகள் குறித்த விளம்பரம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நிறுவனம் தரப்பில், பதஞ்சலி அனைத்து தயாரிப்புகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்ட தரங்களை பின்பற்றி 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உதவியுடன் மிக உயர்ந்த ஆராய்ச்சி மற்றும் தரத்துடன் அனைத்து சட்டபூர்வமாக செயல்முறைகள் மற்றும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்கின்றது. இருப்பினும் இந்த நிறுவனம் தனது தவறை சரி செய்து நிறுவனங்களுக்கு எதிராக சதியில் ஈடுபட்ட நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.