Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார்.

இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய வரவே ஷில்பாவை தீர்த்து கட்ட வேண்டும் என்று நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜபல்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அபிஜித் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். அதன் பின் அங்கு ஷில்பாவை வரவழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்த பிறகு அபிஜித் அதை வீடியோவாக எடுத்து என்னை ஏமாற்றிய பெண்ணுக்கு இப்படித்தான் நிலைமை வரும் என்று ஆக்ரோஷமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஜபல்பூர் காவல்துறையினர் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு 4 தனிப்படைகள் அமைத்து அபிஜித்தை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இளம்பெண் ஒருவரை கழுத்தை  அறுத்து கொலை செய்து விட்டு அதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |