மறைந்த தொழில் அதிபரும், ஆப்பிள் நிறுவனரும் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய செருப்பு நேற்று(நவ..11) ஏலத்திற்கு வந்தது. இவ்வாறு ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்த செருப்பின் ஏலம் நாளை (நவம்பர் 13 ஆம் தேதி) வரை நடத்தப்படுகிறது.
இந்த செருப்பு ரூபாய் 48 லட்சம் முதல் ரூபாய் 64 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏலம் விடப்படும் இந்த செருப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் 1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.