கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து செம்மண் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்க கோரி பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆவணங்கள் உள்ளதாக கூறி அமைச்சர் பொன்முடியை விடுவிக்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.