தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை பகுதியில் கழுகாலமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கவனித்துக் கொண்டனர்.