கன்னி ராசி அன்பர்களே..! இன்று வீண் வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும், வயிறு கோளாறு கொஞ்சம் ஏற்படலாம் ஆகையால் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர்பாலினரிடம் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாகவே முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை இன்று வாங்குவீர்கள்.
கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். இன்று அக்கம்பக்கத்தாரின் அன்பு வரக்கூடும், இன்று மாணவச் செல்வங்களுக்கு கையிலிருந்து தடை விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்திவிட்டு செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது நல்லது ,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்