Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் கண்ணீரை துடைப்போம்”…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ பி எஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்களும் தங்களிடமும் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

எனவே அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு மக்களுக்காக எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று கூறிய அவர் தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |