தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரும், அவரது கணவரும், நடிகருமான கரண் சிங் க்ரோவரும் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.