Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்”…. கேரள மாணவியின் 4 வருட படிப்பு செலவை ஏற்ற நடிகர் அல்லு அர்ஜுன்…‌‌. குவியும் பாராட்டு…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ‌ இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட மாவட்ட ஆட்சியரும் உதவி செய்வதாக கூறியுள்ளார்.

அந்த மாணவிக்கு வி ஆர் பார் ஆலப்பி ப்ராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் உதவுவதாக கூறியுள்ளார். ‌அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் பல தனியார் கல்லூரிகளில் விசாரித்ததில் ஒரு தனியார் கல்லூரியில் 4 வருடம் நர்சிங் படிப்பை படிப்பதற்கு மாணவிக்கு சீட் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாணவியின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு ஸ்பான்சர் தேவைப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணதே ஜா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அல்லு அர்ஜுனுக்கு விவரத்தை கூறியுள்ளார். அதைக் கேட்டவுடன் நடிகர் அல்லு அர்ஜுன் மாணவியின் கல்லூரி படிப்பின் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஒரு வருட படிப்பு செலவை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமாறு அல்லு அர்ஜுனிடம் கூறியபோது மிகவும் பெருந்தன்மையாக 4 வருட படிப்பு செலவையும் மொத்தமாக தானே ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். படிப்பு செலவோடு சேர்த்து மாணவியின் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றையும் தானே ஏற்றுக் கொள்வதாக அல்லு கூறியுள்ளார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த தகவலை பார்த்த கேரள ரசிகர்கள் உட்பட பல ரசிகர்களும் அல்லு அர்ஜுனை பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |