Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…எதிர்பார்த்த லாபம் உயரும்..பயணங்கள் பலன் அளிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடுமையான உழைப்பால் உங்களுடைய தனவரவு நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் பன்மடங்கு உயரும். ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று  அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே அமையும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று உடல்நிலையில் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் இருக்கும். அந்த பயணங்கள் ஓரளவு சுமாரான பலனையே கொடுக்கும்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம், சக ஊழியர்களுடன் கொஞ்சம் கவனமாக பழகுவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகத்தான் செய்ய வேண்டி இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்லும், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இரண்டு நிமிடங்கள் தியானம் இருந்த பின்னர் பாடங்களை தொடங்குவது ரொம்ப நல்லது. அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |