Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 1,895 பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசு கல்லூரிகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்ற முடிந்துள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் 35 கல்லூரிகள் தேசிய அளவில் இடம்பெற்றுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |