Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்”…. அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை…!!!!!

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவானது எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை செய்தார். இந்த புத்தக திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற இருக்கின்றது. மேலும் சிறப்பு சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |