இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது.
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுத்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். இந்த செயலை மூலமாக நீங்கள் இருக்கும் பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற முடியும். இந்த வசதி நவம்பர் 7ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.