கடகம் ராசி அன்பர்களே..! இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவே இருக்கும். நண்பர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். ஆனால் இன்று வாக்கு வாதத்தை மட்டும் தவிர்த்தால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கவனமாக படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறுவீர்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும். கூடுமானவரை உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் முயற்சிகளை செய்யுங்கள். முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
அதுமட்டுமில்லை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்துவதையும், தேர்வு முடியும் வரை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இன்று நண்பர்கள் உங்களுக்கு எந்த விதத்திலும் தடை இல்லாமல் உங்களுக்கு முன்னேற்றப்பாதை எடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருப்பார்கள். நிலுவையில் உள்ள பணம் உங்கள் கையில் வந்து கிடைக்கும். தடைகளும் விலகி செல்லும். தன்னைத் தானே உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் பிறர் உயரவும் நீங்கள் பாடுபடுவீர்கள். மன தைரியம் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்