Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு… சம்பா பயிர் காப்பீடு கடைசி வாய்ப்பு… உடனே பதிவு செய்யுங்கள்….!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாகப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லட்சம் விவசாயிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனீர் ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பந்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 ஆம் தேதி அன்று முடிவடைவதால் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது சேவை மையங்கள், தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழு வீச்சில் இயங்கிட வேளாண்மை மற்றும் உழவர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இதுவரை சம்பா பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு தமிழகம் மேலாண்மை உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |